பகீர் வீடியோ... ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து... பயணிகள் அலறல்!


ரயிலில் பற்றி எரியும் தீ.

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்காநகர் செல்லும் ஹம்சஃபர் விரைவு ரயில், குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்காநகருக்கு ஹம்சஃபர் விரைவு ரயில் செல்கிறது. குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே இந்த ரயில் இன்று சென்று கொண்டிருந்தபோது கடைசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. அத்துடன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப் பார்த்த பயணிகள் அலறித் துடித்தனர். ஆனால், தீ பயணிகள் பெட்டியில் பரவுவதற்குள் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும், மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுத்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஓடும் ரயில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x