திருமயம் அருகே மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தையை கொன்ற இளைஞர் கைது


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மகளை கேலி செய்தது குறித்து தட்டிக் கேட்ட தந்தையை நேற்று இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் பொப்பன் என்ற கே.சின்னராஜ்(48). அதே ஊரைச் சேர்ந்தவர் ரா.சண்முகம் என்ற முருகேசன்(21). இருவரும் உறவினர்கள்.

சின்னராஜின் மகளை முருகேசன் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சின்னராஜ் நேற்று வீராணம்பட்டி விலக்கு பகுதியில் இருந்த முருகேசனை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.அதன்பிறகு வீட்டுக்கு சென்ற முருகேசன் கத்தியை எடுத்து வந்து சின்னராஜை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சின்னராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பனையப்பட்டி போலீஸார், முருகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x