கிராமத்தில் ரகசியமாக இயங்கிய துப்பாக்கித் தொழிற்சாலை... போலீஸார் அதிர்ச்சி!


கைது செய்யப்பட்ட முனிபர் மல்லிக்

ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக இயங்கிய துப்பாக்கித் தொழிற்சாலையை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், துப்பாக்கி தயாரிக்கும் பொருட்ககளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், கந்தமாலில் உள்ள ரைக்கியா போலீஸ் எல்லைக்குட்பட்ட ராசிகுடா கிராமத்தில் ஒரு வீட்டில் ரகசியமாக துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரைக்கியா போலீஸார், ராசிகுடா கிராமத்தில் உள்ள அந்த வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்கள், துப்பாக்கி தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் இருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட ரிசிகுடாவைச் சேர்ந்த முனிபர் மல்லிக் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்தது. சிறையில் இருந்து வெளியே வந்தவர், மீண்டும் துப்பாக்கி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட முனிபர் மல்லிக்கிடமிருந்து எத்தனை பேர் துப்பாக்கிகள் வாங்கியுள்ளனர், யார் அவர்கள் என்பது தொடர்பான தகவல்களை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x