பலத்த மழை மற்றும் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா மங்கச்சார் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் ஒரு படகில் ஏராளமானோர் நேற்று இரவு பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் காளி அல்கா காட் பகுதியில் இருந்து நேப்பூர் அல்கா சரண்சலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை மற்றும் புயல் காரணமாக படகு நிலைத்தடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்து கூச்சலிட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற உள்ளூர் மீனவர்கள் மற்றும் மீட்புப் படையினர், 20-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
அசாமில் நேற்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும், புயல் காற்று வீசும் என குறிப்பிட்டு அப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஏற்கெனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இதனை பொருட்படுத்தாமல் ஆற்றில் படகில் சென்று விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் அடுத்த 3 நாள்களுக்கும் வானிலை ஆய்வு மையம், மழை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!