கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் மதுரை தெப்பக்குளம் அருகில் பாதாள சாக்கடையில் இறங்கி தூய்மைப் பணியாளர் வேலை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய மா.வெங்கடேசன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம், ‘’துப்புரவு பணியாளர் இரவு நேரங்களில் சாலையோரம் படுத்து தூங்குவதைத் தவிர்க்கவும், அவர்கள் உடைகள் மாற்றவும், திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்து தருவதாக கலெக்டர் கூறியுள்ளார். பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது ஆபத்தானது. அதனை யாரும் செய்யக் கூடாது என்றவர், இந்தியாவிலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது’’ என்றார்.