தேர்வின் போது விடைத்தாளைத் காட்ட மறுப்பு... 10-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து!


மகாராஷ்டிராவில் 10-ம் வகுப்பு தேர்வின் போது விடைத்தாளைக் காட்ட மறுத்த மாணவரை, மூன்று மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், பிவாண்டி நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 10-ம் வகுப்பு தேர்வின் போது, ஒரு மணவரிடம், சக மாணவர்கள் மூன்று பேர் விடைத்தாளை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அந்த மாணவர் விடைத்தாளை காட்ட மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், தேர்வு முடிந்து வெளியே வந்த அந்த மாணவரைப் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த மாணவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த பிவாண்டி, சாந்தி நகர் போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 324 (ஆபத்தான ஆயுதம் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) கீழ் மூன்று மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்வு அறையில் விடைத்தாளை காட்ட மறுத்த சம்பவத்தில் மாணவரை சக மாணவர்களே கத்தியால் குத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x