மும்பையில் அதிர்ச்சி... 'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை தாக்கிய மர்ம கும்பல்!


குடியிருப்புக்குள் நடந்து செல்லும் சிறுவன்

மும்பையில், ஒருவரை 'ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷத்துடன் வரவேற்ற 11 வயது சிறுவனை தாக்கி, 'அல்லா ஹு அக்பர்' என கோஷமிட வைத்திருக்கிறது ஒரு கும்பல். இந்தக் கும்பலைச் சேர்ந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள சிறுவனை தாக்கிய இளைஞர்கள்

மும்பை, மீரா சாலை பகுதியில் வசிப்பவர் சஞ்சய் சிங். இவரது 11 வயது மகன் நேற்று இரவு 9.30 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு பால் வாங்கச் சென்றார்.

அப்போது அச்சிறுவன் தனது குடியிருப்பு வளாகத்தில், ஒரு நபரைப் பார்த்து 'ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுவனை தாக்கியதோடு, 'அல்லா ஹு அக்பர்' என உச்சரிக்குமாறு துன்புறுத்தியுள்ளனர். அப்படிச் சொல்ல மறுத்த அச்சிறுவனை பலவந்தமாக உச்சரிக்க வைத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அக்கட்டித்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மும்பை போலீஸார் பதிவு செய்துள்ள எப்ஐஆர்

சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட குடியிருப்புவாசிகளில் ஒருவர், தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றார். அதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தைக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இச்சம்பம் குறித்து மீரா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 448, 295 ஏ, 153 ஏ, 37, 1சி மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் சட்டத்தின் 135-வது பிரிவின் கீழ், அடையாளம் தெரியாத அந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x