ஹரியாணாவிருந்து சென்னைக்கு கண்டெய்னரில் வந்த பாஜக கொடிகள், தொப்பிகள்... பறிமுதல் செய்த பறக்கும் படை!


கண்டெய்னர்

சென்னையில் ஹரியாணாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடி, தொப்பி, முகக்கவசம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னையில் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் நாதமுனி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்..

பாஜக கொடி மூட்டைகள்

அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை மடக்கிப் பிடித்து போலீஸார் சோதனை நடத்தினர். அதில் 600 மூட்டையில் பாஜக கொடி, தொப்பி மற்றும் முகக்கவசம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் கண்டெய்னர் லாரி மற்றும் பாஜக கொடி ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஹரியாணா மாநிலத்தில் இருந்து கொடிகளை கொண்டு வந்ததும் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அதனை கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதனை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இது குறித்து லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

கண்டெய்னர்

மேலும் பாஜக கொடி, தொப்பி எதற்காக கொண்டு வரப்பட்டது, திருமண மண்டபத்தில் இருந்து எங்கு கொண்டு செல்லவிருந்தார்கள் என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x