கேரளாவில் பயங்கரம்... 2 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை!


2 வயது குழந்தை இறப்பு

கேரள மாநிலம் மலப்புரத்தில் 2 வயது மகளை தந்தையே அடித்துக் கொன்ற கோடூரம் அரங்கேறி இருக்கிறது. அந்தக் குரூர தந்தையை மலப்புரம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மலப்புரம், கேரளா

மலப்புரம் உதிரும்பொயிலைச் சேர்ந்தவர் முகமது ஃபைஸ். இவர் தான் தனது இரண்டு வயது மகளை அடித்துக் கொன்ற அந்த குரூர தந்தை. இது தொடர்பாக அந்தக் குழந்தையின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஃபைஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரனையில், குழந்தையின் உடலில் அடித்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை குழந்தை சாப்பிடும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி முகமது ஃபைஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது (கோப்பு படம்)

இதற்கிடையில், குழந்தையை அவரது தந்தை கட்டிலில் வேகமாக தூக்கி வீசியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில் பலமாக அடிபட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

x