மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது


மைக்கேல்ராஜ்

சிவகங்கை: இளையான்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாயைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (56). மாற்றுத் திறனாளியான இவர், இளையான்குடி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, மைக்கேல்ராஜை கைது செய்தனர்.

x