பரபரப்பு...10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக சிக்கிய வேளாண் அதிகாரி!


லஞ்சம்

உரக்கடைக்காரரை மிரட்டி மண்டல வேளாண் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் காமரெட்டியில் உள்ள பிச்சுகுந்தா மண்டலத்தில் மண்டல வேளாண் அதிகாரியாக பணிபுரிபவர் போச்சையா. இவர் உரக்கடை உரிமையாளர் கங்காதரிடம் பொய் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு(ஏசிபி) அதிகாரிகளிட்ம் கங்காதர் புகார் செய்தார். இதையடுத்து போச்சையாவைப் பிடிக்க ஏசிபி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் பிச்சுகுந்தா பேருந்து நிலையத்தில் வந்து பணத்தை கொடுக்குமாறு கங்காதரிடம் போச்சையா கூறியுள்ளார்.

கைது

உரக்கடை உரிமையாளரான கங்காதர், நேற்று பணத்தைக் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த ஏசிபி அதிகாரிகள் போச்சையாவை கையும், களவுமாக பிடித்து கரீம் நகர் எஸ்.பியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் மண்டல வேளாண் அதிகாரி போச்சையா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் ஐதராபாத் அரசு துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


x