வாணியம்பாடியில் நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத 104 வயது அக்கா... 102 வயது தம்பி!


அக்கா - தம்பி

வாணியம்பாடி அருகே வயது மூப்புக் காரணமாக அக்கா உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்பவருடைய மனைவி வள்ளியம்மாள் (104). இவர், வயது முதிர்வின் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இந்த நிலையில் அதே ஊரில் வசித்து வரும் வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (102) என்பவருக்கு வள்ளியம்மாள் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்கா உயிரிழந்த தகவல் அறிந்த அவர் வேதனை அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அமர்ந்திருந்த இடத்திலேயே துரைசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கா உயிரிழந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு என்பவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்களும், 43 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அதேபோல், அவரது தம்பி துரைசாமிக்கு 4 மகன்களும், 2 மகள்களும், 57 பேரக் குழந்தைகள் உள்ளனர். இறந்து போன துரைசாமியின் மகன் அண்ணாமலை என்பவர் செட்டியப்பனூர் பகுதிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார்.

மேலும், இறந்து போன வள்ளியம்மாள் மற்றும் துரைசாமியின் உடல்கள் இன்று மாலை அதே ஊரில், அருகருகே அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

x