ராஷ்மிகா, கத்ரீனாவைத் தொடர்ந்து கஜோல்... இணையத்தில் பரவும் டீப்ஃபேக் வீடியோவால் அடுத்த சர்ச்சை


கஜோல் - டீப்ஃபேக் வீடியோ

ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் பரவி சர்ச்சையானதன் வரிசையில், பாலிவுட் நடிகர் கஜோல் இடம்பெறும் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி அடுத்த சர்ச்சைக்கு அடிபோட்டிருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா சர்ச்சையில், சாரா படேல் என்ற பெண் கவர்ச்சியான கருப்பு உடையுடன் லிப்டில் நுழைவதை டீப்ஃபேக் வீடியோவாக சித்தரித்து இருந்தது. சாரா படேல் முகத்தில் ராஷ்மிகாவின் முகம் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருந்தது. ராஷ்மிகாவுடன் அண்மை திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்த பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன், இந்த டீப்ஃபேக் முறைகேடுக்கு எதிராக முதல் ஆட்சேபக் குரல் எழுப்பினார். இதனை அடுத்து, டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிரான கண்டனங்கள் இணையத்தில் எதிரொலித்தன.

கத்ரீனா - கஜோல் - ராஷ்மிகா

கத்ரீனா கைஃப் சர்ச்சையில், 'டைகர் 3' படத்திலிருந்து அவரது மார்பிங் படம் டீப்ஃபேக் நுட்பத்தில் இணையத்தில் வெளியானது. அசல் பதிவில் துண்டு ஒன்றினை அணிந்தபடி சண்டைக்காட்சியில் கத்ரீனா பங்கேற்றிருப்பார். டீப்ஃபேக் நகல் அவரை உடலை காட்சிப் பொருளாக சித்தரித்து இருந்தது. இந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகையான கஜோல் டீப்ஃபேக் வீடியோவும் இணைந்திருக்கிறது.

புதிய வைரல் வீடியோவில் கஜோலின் முகத்தை உடலில் மார்பிங் செய்த ஒரு பெண், கேமரா முன்பாக உடை மாற்றுகிறார். உண்மையில் இது ஒரு டிக் டாக் பெண் பிரபலத்தின் வீடியோ ஆகும். ’என்னுடன் தயாராகுங்கள்' என்ற தலைப்பிலான ட்ரெண்டிங்கின் அங்கமாக தனது வீடியோவை அவர் டிக் டாக்கில் வெளியிட்டிருந்தார். அவரது முகத்தில் கஜோல் அடையாளத்தை டீப்ஃபேக் வாயிலாக மார்பிங் செய்து புதிய வீடியோவை விஷமிகள் வெளியிட்டுள்ளனர்.

கஜோல்

ராஷ்மிகா வீடியோ சர்ச்சையை அடுத்து, மத்திய அரசு சார்பில் டீப்ஃபேக் வீடியோ மற்றும் அதனை பரப்புவோருக்கு எதிரான சட்டப்படியான நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது. டெல்லி போலீஸார் விசாரணையின் கீழான இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சிக்கியுள்ளார். சமூக ஊடகத்தில் அவரே முதல் நபராக ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவை வெளியிட்டது சைபர் க்ரைம் விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் வாசிக்கலாமே...

x