பெண் சந்தேக மரணம்: கணவர் மீது கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார்


கும்பகோணம்: பாபநாசம் வட்டம் உள்ளிக்கடை மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் த.சத்தியராஜ்(40). செங்கல் சூளைத் தொழிலாளியான இவர், 17 ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பேட்டை செருமாக்கநல்லூரைச் சேர்ந்த சதாசிவம், செல்வி தம்பதியின் மகள் சரண்யா(32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சரண்யா நேற்று உயிரிழந்து விட்டதாக சத்தியராஜின் உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், சரண்யாவின் தாய் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்துள்ளனர். பின்னர், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, சரண்யாவின் தாய் செல்வி கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், சரண்யாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், சத்தியராஜை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சரண்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம், சரண்யாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபின்னர், புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் உறுதி அளித்ததன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.

x