பெரும் துயரம்... பெட்ரோல் டேங்கர் லாரி- கார் நேருக்குநேர் மோதல்… 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி!


திருப்பூர் விபத்து

தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் மோதிகொண்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு என்ற இடத்தில் தாராபுரம் - பழநி செல்லும் சாலையில் காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்த 4 பேர் உயிரிழந்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அலங்கியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரில் பயணம் செய்த 5 பேரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் கோவையில் இருந்து பழநி கோயிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பியதும் தெரியவந்துள்ளது. போலீஸார் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதிகொண்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x