ஷாக்: மனைவியை 41 முறை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற கொடூரக் கணவன் கைது!


கைது செய்யப்பட்ட அஹ்மத் யாசின்

துருக்கியில் உள்ள ஓட்டல் அறையில் மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் 41 முறை குத்திக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹ்மத் யாசின் மனைவியுடன் தங்கிருந்த ஓட்டல்.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து பயங்கரமாக சண்டை போடும் சத்தம் நேற்று கேட்டது.

இதனால் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவர் அருகில் ரத்தக் களறியுடன் அவரது கணவர் நின்று கொண்டிருந்தார்.

ஸ்க்ரூ டிரைவர்

இதுகுறித்து போலீஸாருக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், சட்டை முழுவதும் ரத்தத்துடன் நின்று கொண்டிருந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இங்கிலாந்தைச் அஹ்மத் யாசின்(28) என்பது தெரிய வந்தது.

இங்கிலாந்தில் இருந்து சுற்றுலாவிற்காக மூன்று நாட்களுக்கு முன்பு தான் கணவன், மனைவி இருவரும் துருக்கி வந்துள்ளனர். படகில் வெளியே சென்று விட்டு வந்த பின் போதைப்பொருள் தருவது தொடர்பாக கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் 26 வயதான தனது மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் கழுத்து மற்றும் உடலில் 41 இடங்களில் அஹ்மத் யாசின் குத்திக் கொலை செய்தது தெரிய வந்தது.

கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்த போது போதைப்பொருட்கள் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் துருக்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x