கடன் வாங்கித் தருகிறோம்! லட்சக்கணக்கில் மோசடி… சிக்கும் நடிகை நமீதாவின் கணவர்; போலீஸ் அதிரடி சம்மன்!


கணவர் சவுத்ரியுடன் நமீதா

மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ சேர்மேன் சவுத்ரி

சேலம் மாநகர் மாமாங்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் கடந்த அக்டோபர் 30ம் தேதி எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி கூட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்திய அமைப்பின் தேசிய தலைவராக உள்ள மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளராக உள்ள பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு சேர்மனாக உள்ள நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் கூட்டம்

இதனையடுத்து, இந்த அமைப்பு ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாகவும், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில், ஃபைனான்ஸியர் கோபால்சாமி என்பவர் கடந்த 2022ம் ஆண்டு, முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தன்னிடம் 50 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக சேலம் சூரமங்கலம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், துஷ்யந்த் யாதவ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் நமீதாவின் கணவர் சவுத்ரியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே 2 பேர் கைதான நிலையில், தற்போது நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இது தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

x