சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ, கார், இருசக்கரம் வாகனம் என 13 வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இரண்டு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன.இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பி பிளாக் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களது கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை அங்கு வந்த அடையாளம் தெரியாது இரு நபர்கள் வீட்டு வாசல் அருகே நிற்க வைத்திருந்த 2 கார், 9 ஆட்டோ, 2 பைக் என 13 வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் அங்கு வந்த கொடுங்கையூர் போலீஸார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதுடன் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து 13 வாகனங்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிய மர்மக் கும்பலைத் தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...