உத்தரப் பிரதேசத்தில் காவலர் பணிக்காக நடந்த தேர்வு தொடர்பான வினாத்தாள் அவுட்டானதால் போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் சேர்க்கைக்காக கடந்த 17, 18-ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, இந்த எழுத்து ரத்து செய்யப்படுவதாகவும், இப்பணிக்கு மீண்டும் 6 மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ரிசர்வ் சிவில் போலீஸ் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுகளின் கண்ணியத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது. இளைஞர்களின் கடின உழைப்புடன் விளையாடுபவர்கள் எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றப்படமாட்டார்கள். இதுபோன்ற சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ் கான்ஸ்டபிள் ஆள்சேர்ப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அம்மாநில போலீஸார் இதுவரை மாநிலம் முழுவதும் 244 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில காவல் துறை தலைவர் பிரசாந்த்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!
முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!
திருமணம் செய்ய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய தொழிலதிபர்: கூலிப்படையினரும் சிக்கினர்!
காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!