சென்னையில் பயங்கரம்... தூக்கி வீசிய கார்... தூய்மைப் பணியாளர் உட்பட 2 பேர் கவலைக்கிடம்!


விபத்துக்குள்ளான கார்

சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் குடிபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த கார் மோதி, தூய்மைப் பணியாளர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், சென்னை அண்ணாநகரில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடிய நிலையில், பிடிபட்டவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

x