போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி: உதவி ஆய்வாளர் கைது @ திருப்பூர்


திருப்பூர் உதவி ஆய்வாளர் கைது

திருப்பூர்: போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார். அத்துடன் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர் நல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் முரளிதரன் (52) மற்றும் ஜெயராஜ், கிருஷ்ணராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், மோசடி வழக்கில் உதவி ஆய்வாளர் முரளிதரனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.

- இரா.கார்த்திகேயன்