கண்காட்சியில் பாடல் ஒளிபரப்புவதில் தகராறு: ஹெல்மெட்டால் தாக்கி வாலிபர் படுகொலை!


பிரவீன்.

பெங்களூருவில் கண்காட்சியில் தமிழ், கன்னடப் பாடல்களை டி.ஜே இசைப்பது தொடர்பான தகராறில் வாலிபர் ஒருவரை அவரது நண்பர்கள் ஹெல்மெட்டால் தாக்கி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்ளூருவில் உள்ள பானஸ்வாடி அருகே லிங்கராஜபுரத்தில் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டி.ஜே தமிழ், கன்னடப் பாடல்களை ஒளிபரப்பு செய்தார்.

அப்போது இந்த கண்காட்சியில் பழைய பாகலூர் லே அவுட்டைச் சேர்ந்த பிரவீன், அவரது நண்பர்களுடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது பாடல் இசைப்பது தொடர்பாக பிரவீனுக்கும், அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவர் பிரவீனை ஹெல்மெட்டால் தாக்கினார். இதனால் தலையில் படுகாயமடைந்த பிரவீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.

இவ்வழக்குத் தொடர்பாக சுந்தர், ஆறுமுகம், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிழக்குப் பிரிவு காவல் துறை துணை ஆணையர் டி.தேவராஜா தெரிவித்தார். கொலை செய்யப்ட்ட பிரவீன் டெலிவரி பாயாக வேலை செய்தார். கடந்த காலங்களில் அவர் பலமுறை நண்பர்களுடன் சண்டையிட்டுள்ளதாகவும், 2021-ம் ஆண்டு போக்குவரத்து போலீஸாருடன் அவர் தகராறு செய்தது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

x