ஒடிசாவின் ஜார்சுகுடாவிலிருந்து சம்பல்பூருக்குச் சென்றுக் கொண்டிருந்த மெமு பயணிகள் ரயில், தண்டவாளத்தில் வந்த எருமை மாடு மீது மோதி தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் ஜார்சுகுடாவிலிருந்து சம்பல்பூருக்குச் நேற்று மாலை சென்றுக் கொண்டிருந்த மெமு பயணிகள் ரயில், தண்டவாளத்தில் கடக்க முன்ற எருமை மாடு மீது மோதியுள்ளது. இதனால் பயங்கர சத்ததுடன் ரயிலின் முன்பகுதி தடம்புரண்டுள்ளது.
இதில் உயிரிழப்பு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தண்டவாளத்தை சீரமைப்பதற்கான பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் நிகழ்விடத்துக்கு மீட்பு ரயிலும் சென்ற நிலையில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.