தண்டவாளத்தில் யூடியூபர் செய்த சம்பவம்... வைரலான வீடியோ... அதிர்ச்சியான ரயில்வே போலீஸார்!


ரயில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரையை கொளுத்தி போட்டு புகைமண்டலத்தை ஏற்படுத்தி வீடியோ வைரலான நிலையில், அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே தண்ட்ரா என்ற ரயில் நிலைய தண்டவாளத்தில் யூடியூபர் ஒருவர் பாம்பு மாத்திரைகளை கொளுத்தி அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுபோன்ற செயல்கள் ரயில் விபத்துக்கு வழிவகைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள ரயில்வே பாதுகாப்பு படை,

வீடியோவின் அடிப்படையில் 145 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தற்போதுவரை கைது மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் அபராதம் விதிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x