அதிர்ச்சி வீடியோ; நடைமேடைக்குள் சீறிப் பாய்ந்த அரசு பேருந்து: 3 பயணிகள் உடல் நசுங்கி பலி!


நடைமேடைக்குள் செல்லும் பேருந்து

ஆந்திராவில் பேருந்து நிலையத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் உள்ள பண்டித நேரு பேருந்து நிலையத்தில் 11வது பிளாட்பாரத்தில் மாநில சாலைப் போக்குவரத்து கழக ஏசி சொகுசு பேருந்து நேற்று நின்றது. அதில் 24 பயணிகள் அமர்ந்திருந்தனர். பேருந்தில் அமர்ந்திருந்த ஓட்டுநர் இயக்க முற்பட்டார்.

அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தின்மீது மக்கள் நின்ற பகுதியில் வேகமாகச் சென்றது.இதனால் அங்கு நின்ற மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் திருமல ராவ் கூறுகையில்," விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை ஆர்டிசி ஏற்கும். பேருந்தின் ஓட்டுநருக்கு 60 வயது இருக்கும். வாகனம் சரியான நிலையில் உள்ளது. விபத்திற்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா அல்லது ஓட்டுநரின் பிழை காரணமா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றார்.

இந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

x