பிளாட்பாரம் மீது பேருந்து ஏறி விபத்து; கண்டக்டர் உட்பட 3 பேர் பலி!


பேருந்து விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திலிருந்து குண்டூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு பேருந்து காத்திருந்தது. இந்த நிலையில் பேருந்தை எடுக்க டிரைவர் ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது, பேருந்தின் பிரேக் திடீரென பழுதானதாக தெரிகிறது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்ற பேருந்து பிளாட்பாரம் மீது ஏறியது. அப்போது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், கண்டக்டர் ஆகியோர் மீது பேருந்து மோதி தூக்கி வீசியது.

பேருந்து விபத்து

இந்த பயங்கர விபத்தில் கண்டக்டர், ஒரு குழந்தை, ஒரு பெண் ஆகிய மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்த மூன்று பேர் உடல்களும் விஜயவாடா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

x