ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து! பயங்கரவாதி மிரட்டல்


"நவம்பர் 19ம்தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும்" என்று காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது.

நவம்பர் 19ம்தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x