ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக சுட்ட மர்மநபர்... ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்


துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், பிராங்க்ஸில் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

மவுன்ட் ஈடன் ரயில் நிலையம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிராங்க்ஸில் மவுன்ட் ஈடன் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 ஆண்கள், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 14 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 34 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அந்நாட்டு போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை என்பதும், ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட தகராறின் விளைவாக நடந்தது என்றும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடம்

மவுன்ட் ஈடன் ரயில் நிலையத்தை ரயில் அடைந்ததும் மோதல் குழுவில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நியூயார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

x