பீபீகாரில் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கு மாறுவதற்கு ரூ.10 கோடி லஞ்ச பேரம் நடத்தப்பட்டதாக ஜேடியு எம்எல்ஏ ஒருவர் சக கட்சி நிர்வாகி மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட மகா கூட்டணியிலிருந்து விலகி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, மகா கூட்டணி எம்எல்ஏ-க்கள் ஆதரவில் இருந்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, என்டிஏ கூட்டணி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார்.
இந்நிலையில், பீகார் சட்டப் பேரவையில் நேற்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த இரு நாள்களாக தங்கள் எம்எல்ஏ-க்களை பாதுகாக்கும் முயற்சியில் இரு கூட்டணியினருமே கவனம் செலுத்தினர்.
இருப்பினும் ஆர்ஜேடி எம்எல்ஏ-க்கள் 3 பேர் என்டிஏ கூட்டணிக்கு மாறினர். இறுதியில் 129 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஹர்லாக்கி தொகுதி எம்எல்ஏ-வான சுதன்ஷு சேகரிடம் சொந்தக் கட்சியை சேர்ந்த நபரே, ஆர்ஜேடி-க்கு ஆதராவாக மாறுவதற்கு குதிரை பேரம் நடத்தியதாகவும், இதற்காக தனக்கு ரூ.10 கோடி, அமைச்சர் பதவி வழங்குவதாக வலை விரித்ததாகவும் கூறி, கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பாட்னா டிஎஸ்பி (சட்டம் - ஒழுங்கு) கிருஷ்ணா முராரி பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கில் மற்றொரு ஜேடியு எம்எல்ஏ, கட்சியின் மற்ற 2 எம்எல்ஏ-க்களை கடத்த முயன்றதாகவும் எம்எல்ஏ-வான சுதன்ஷு சேகர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!
நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!
‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!
கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!