அதிர்ச்சி... சகோதரியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபர்!


கொலை

தனது மகனைத் திட்டிய சகோதரியை வாலிபர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் தானேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

தானே ரயில் நிலையம்

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் கொக்கனி பாடா பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு லோகாண்டே. இவரது சகோதரி துர்கா அனில் குண்டே(40). இவரது மகன் யாஷ்(14). நேற்று முன்தினம் நள்ளிரவு, சஞ்சுவின் 10 வயது மகனை, துர்கா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் துர்காவிற்கும், சஞ்சுவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

விசாரணை

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு, இரும்புக் கம்பியால் துர்காவை சரமாரியாக தாக்கினார். இதைத் தடுக்க வந்த யாஷையும் அவர் இரும்புக் கம்பியால் தாக்கினார்.

இதனால் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துர்கா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். யாஷ் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று அதிகாலை சஞ்சு லோகாண்டேவை கைது செய்தனர். தனது மகனைத் திட்டியதற்காக சகோதரியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x