என் அம்மாவை இவர்கள் தான் கொன்றார்கள்... 4வயது சிறுமி அளித்த பரபரப்பு சாட்சி... 2 பேருக்கு ஆயுள் தண்டனை!


ஆயுள் தண்டனை

2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை தந்தையும், மாமாவும் சேர்ந்து கொலை செய்தார்கள் என்று 4 வயது சிறுமி அளித்த பரபரப்பு சாட்சியம், குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள்தண்டனையை இன்று பெற்றுத் தந்துள்ளது.

கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்னேராவைச் சேர்ந்தவர் வினிதா. இவர் சாந்தி விஹாரைச் சேர்ந்த விபின் சக்சேனாவை ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணமானதில் இருந்து வினிதாவை, விபின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தார். இந்த நிலையில், பரேலியில் கடந்த 2021 ஆக.16-ம் தேதி வினிதா படுகொலை செய்யப்பட்டார்.

பரேலி நீதிமன்றம்

இக்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இக்கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது வினிதாவின் கொலையை நேரில் பார்த்த அவரது 4 வயது மகள் கோமல், தனது தாயை தந்தை விபின் சக்சேனாவும், மாமா ஆகாஷ் சக்சேனாவும் சேர்ந்து கொலை செய்தனர் என்று சாட்சியமளித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வினிதா கொலை வழக்கில் விபின் சக்சேனா, ஆகாஷ் சக்சேனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரேலி 10வது கூடுதல் மாவட்ட நீதிபதி தப்ரேஸ் அஹமது தீர்ப்பளித்தார்.

தனது தாயைக் கொலை செய்த தந்தைக்கும், மாமாவுக்கும் ஒரு சிறுமி தனது சாட்சியம் மூலம் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x