சீனாவின் பிரபல மதுபான ஆலையின் பீர் கொள்கலனில் ஊழியர் ஒருவர் சிறுநீர் கழித்ததில், சர்வதேச அளவில் அந்த நிறுவனத்தின் பீர் விற்பனை அடிவாங்கி இருக்கிறது.
சிங்தாவோ என்பது சீனாவின் பிரபல பீர் பானங்களில் ஒன்று. சீன பீர் சந்தையில் இரண்டாமிடம் வகிக்கும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த சில தினங்களாக பெரும் சரிவு கண்டுள்ளது. மேலும், உள்நாட்டு விற்பனைக்கு நிகராக வெளிநாடுகளிலும், சிங்தாவோ பீரின் விற்பனை ஒரேயடியாக படுத்துள்ளது.
இவை அனைத்துக்கும், சீனாவில் இருக்கும் சிங்தாவோ மதுபான ஆலையில் நடந்த ஒரு சம்பவம்தான் காரணம். அந்த சம்பவம் தொடர்பான வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் பிங்டு என்ற இடத்தில் செயல்படும் சிங்தாவோ தொழிற்சாலையில் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்தாவோ பீர் தயாரிப்புக்கான கொள்கலன் ஒன்றில் ஏறும் நபர் ஒருவர், நிதானமாக அதில் சிறுநீர் கழிக்கிறார். அதனை இன்னொரு நபர் வீடியோ எடுக்கிறார். சிறுநீர் கழித்த நபர் தொழிற்சாலை ஊழியருக்கான சீருடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இந்த வீடியோ வெளியானதுமே, ஷாங்காய் பங்குச்சந்தையில் சிங்தாவோ நிறுவனத்தின் பங்குகள் படுவீழ்ச்சி கண்டன.
அதுமட்டுமன்றி தென்கொரியா உட்பட சிங்தாவோ பீர் ஏற்றுமதியாகும் அத்தனை நாடுகளிலும் அதனை விற்பனை வெகுவாக சரிந்தது. பதறிப்போன சிங்தாவோ மதுபான நிறுவனம், ‘சம்பவம் நிகழ்ந்த கொள்கலனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும்’ விளக்கம் அளித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!