துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்


துர்கா பூஜை பந்தலில் கடும் நெரிசல்

பீகாரில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நவராத்திரி பூஜை விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பொது இடங்களில் பந்தல்களில், துர்க்கை அம்மன் சிலைகள் அமைத்து, மக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், ராஜா தளம் பகுதியில், பந்தல் அமைக்கப்பட்டு மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரசாதம் தருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அதனைப் பெற முண்டியடித்ததாக கூறப்படுகிறது.

நெரிசலில் சிக்கி 5வயது சிறுவன் உட்பட மூவர் பலி

அப்போது, 5 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்ததை அடுத்து அவரை நசுக்காமல் காக்க மேலும் 2 வயதான பெண்கள் நெரிசலில் சிக்கி உள்ளனர். இதில் மூவரும் மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தாவிர்க்க கூடுதல் போலீஸ் குவிப்பு

உயிரிழந்த மூவரது உடல்களையும் மீட்டுள்ள போலீஸார் சம்பவ இடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். துர்கா பூஜை பந்தலில் 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x