பதைபதைக்கும் வீடியோ... மின்னல் வேகத்தில் மோதிய கார்... நடைபாதையில் தூக்கிவீசப்பட்ட 4 பெண்கள்!


மங்களூரு விபத்து

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று காலை பெண்கள் சிலர் குழுவாக சாலை ஓரம் இருந்த நடைபாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து அதி வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரூபாஸ்ரீ என்ற 23 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்ற 4 பெண்கள் காயமடைந்தனர். இவர்களை இடித்த அந்த கார் நிற்காமல் அங்கிருந்து வேகமாக விரைந்து சென்றது. இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸூக்கும், போலீஸூக்கும் தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீஸார், இறந்த ரூபாஸ்ரீயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 4 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் கார் உரிமையாளரான காம்லேஷ் பல்தேவ் என்பவரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு காரை சாவகாசமாக கொண்டு சென்று சர்வீஸ் சென்டரில் விட்டு, வீட்டிற்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். காம்லேஷ் மீது பொறுப்பற்ற முறையிலும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கோர விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x