வால்பாறையில் அதிர்ச்சி... ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி; சுற்றுலா வந்தபோது சோகம்


வால்பாறை அருகே ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வால்பாறை அருகே ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில், உடல்களை தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ரபேல், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய ஐந்து பேர் உட்பட 10 பேர் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

வால்பாறை அருகே ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உடன் சென்ற மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கல்லூரி மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மூன்று மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் 2 மாணவர்களின் உடல்களை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட மூன்று உடல்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

x