பரபரப்பு… கார் நம்பர் பிளேட்டை கழற்றி வைத்துவிட்டு இளைஞர்கள் செய்த விபரீத செயல்!


டெல்லி அருகே குருகிராமில் இளைஞர்கள் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்துக் கொண்டே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் வாகனங்களை ஆபத்தான முறையில் ஓட்டி சாகசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த விபரீத விளையாட்டு யாரும் எதிர்பார்க்காதது. குருகிராமில் இளைஞர்கள் சிலர் தங்களது எஸ்யூவி காரின் மேல் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் சாலையில் பயணித்த சக வாகன ஓட்டிகள் பெரும் பதற்றம் அடைந்தனர். வேகமாக சென்று கொண்டிருந்த காரின் உள்ளே இருந்து ஒருவர் பட்டாசுகளை கொளுத்தி காரின் மேற்பகுதியில் தூக்கி வீசியவாறு சென்றுள்ளார். இந்த காட்சிகளை பின்னால் வேறொரு வாகனத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

14 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து குருகிராம் போலீஸார் இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்று காவல்துறையால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த செயலை அறிந்து காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என்று அறிந்த இளைஞர்கள் காரின் நம்பர் பிளேட்டை கழற்றி வைத்துவிட்டு பயணித்தனர். எனினும், வாகனத்தை வைத்து காரை தேடும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

x