அதிர்ச்சி... கொத்துக் கொத்தாக செத்துக் கிடந்த 33 மயில்கள்... விஷம் வைக்கப்பட்டதா?


செத்துக் கிடந்த மயில்கள்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் அருகருகே உள்ள தோட்டங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு மானாவாரி விவசாயமான சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் நிலையில், அவ்வப்போது இப்பகுதியில் மர்மமான முறையில் மயில்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி கிராம பஞ்சாயத்தில் அருகருகே உள்ள தோட்டங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வதம்பச்சேரி காந்திநகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 17 மயில்களும், ராமசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய காலி இடத்தில் 12 மயில்களும், கோபால்சாமி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 2 மயில்களும், கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 2 மயில்கள் என 33 மயில்கள் இறந்து கிடந்தன.

வனத்துறையினர் நேரடி விசாரணை

தகவலறிந்த சுல்தான்பேட்டை போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வன அலுவலர் சந்தியா, சந்துரு மற்றும் அரவிந்த் ஆகியோர் உடனடியாக மயில்கள் இறந்துகிடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் இறந்து போன 33 மயில்களின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதற்காக மதுக்கரை எடுத்துச் சென்றனர்.

மேலும் கோபால்சாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 2 தினங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதன் விதைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த வனத்துறையினர் சேகரித்து சென்றனர். மயில்களின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன அலுவலர் சந்தியா தலைமையில் விச

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

x