வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!


ரெய்டு நடந்த நிறுவனம்

மருந்து ஏற்றுமதி. இறக்குமதி செய்யும் நிறுவனம் மற்றும் ஸ்டீல் கம்பெனி தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை சோதனை இன்று நடைபெற்று வருகிறது.

ரெய்டு நடந்த நிறுவனம்

சென்னை அண்ணாசாலை சயல் மேன்ஷன் வளாகத்தில் ஐந்தாவதுமாடியில் இயங்கி வரும் kawman Exact என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அதிகமான வருமானவரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் கவர்லால் அன்ட் கோ என்ற நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை சோதனை

சென்னை எழும்பூரில் உள்ள ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள அண்ணாமலை வளாகத்திலும் அதே போன்று சௌகார்பேட்டையில் உள்ள அலங்கார் காம்ப்ளக்ஸ் என்ற வளாகத்திலும் மாதவரத்தில் உள்ள நடராஜன் சாலையில் உள்ள கிடங்கு, சென்னை பார்க் டவுன் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

இதேபோல், வேப்பேரியில் உள்ள கேவி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், பார்க் டவுனில் இயங்கிவரும் கவர்லால் அன்ட் கோ என்ற மொத்த மருந்து விநியோகஸ்தர் நிறுவனம், மாதவரத்தில் உள்ள ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுனில் இயங்கிவரும் பி மனிஷ் குளோபல் இங்க்ரீடியண்ட்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x