மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 5 மாத ஆண் குழந்தை ஊக்கை விழுங்கிய நிலையில் அதனை மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அகற்றி சாதனைப் படைத்துள்ளனர்.
மேற்கு வங்கம் ஹூக்ளியின் ஜாங்கிபாரா பகுதியைச் சேர்ந்தவர் ஜுக்ரா மற்றும் தேஸா. இந்த தம்பதிக்கு 5 மாதமான ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
இஎன்டி துறை மருத்துவர் சுதீப்தாஸ் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் குழந்தை ஊக்கை விழுங்கியுள்ளதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் இருந்து ஊக்கை வெற்றிகரமாக அகற்றினர்.
குழந்தைகள் வளர்ப்பு எளிதான காரியமல்ல..பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!