அதிர்ச்சி... மாணவியை கேலி செய்த வாலிபர்; தட்டிக்கேட்ட உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட தந்தை, மகன்


பெண் வீட்டில் துப்பாக்கி சூடு

உத்தரபிரதேசத்தில் கேலி கிண்டல் செய்ததை தட்டி கேட்டதால் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து உறவினர்கள் 7 பேரை, தந்தை, மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மகாபோ மாவட்டத்தின் விண்டோ கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த தந்தை, மகன் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட மகோபா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபர்ணா குப்தா, துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பெண் வீட்டில் துப்பாக்கி சூடு

மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர திவாரி என்பவர் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி ஜிதேந்திர திவாரியை கண்டித்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்திரா மற்றும் அவரது தந்தை ஆகியோர் துப்பாக்கியுடன் மாணவியின் வீட்டிற்கு வந்து உறவினர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஜிதேந்திரா மற்றும் அவரது தந்தையை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெண் வீட்டில் துப்பாக்கி சூடு

இருப்பினும், இரு குடும்பத்தினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

x