ஹமாஸின் விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத், வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காஸாவிலிருக்கும் ஹமாஸ் குழுவினா், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினர். நிலம், கடல், வான் வழியாக இஸ்ரேலுக்குள் 22 இடங்களில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு மின்சாரம், இணைய சேவை ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா உருக்குலைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு ஹமாஸ் படையின் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் மிகக் கடுமையான வான்வெளி தாக்குதலை நடத்தியது. அதில் ஹமாஸ் படையினருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அந்த தாக்குதலில் ஹமாஸ் குழுவின் விமானப் படைத் தலைவர் முராத் அபு முராத், கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த அக். 7 ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முராத் தான் முக்கிய காரணம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!
குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!