அதிர்ச்சி... கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்


அசாமில் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

அசாம் மாநிலத்தில் கட்டுகட்டாக போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் போலி ரூபாய் நோட்டுகளை சிலர் பரப்பிவிட முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். லக்‌கிம்புர் மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வின் போது மொஃபிதுல் இஸ்லாம் என்ற நபர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அவரிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

போலி நோட்டுகள் அச்சிட்ட நபரை கைது செய்த அசாம் போலீஸ்

தொடர்ந்து அவரது அலுவலகத்தில் போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வில் சுமார் 2 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 433 போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 8ம் தேதி கௌஹாத்தி போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வின் போது 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. நாட்டின் எல்லையோர மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக இது போன்ற சதி திட்டங்களில் ஒரு கும்பலை ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால், தொடர் சோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

x