வைரல் வீடியோ: சாலை விதியா... அப்படின்னா என்ன?- காதலியுடன் ஜாலி ரைடு சென்ற காதலன்


உத்தரபிரதேசம் மாநிலத்தில் இளம்ஜோடி சாலை விதிகளை மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை சிம்போலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம்ஜோடி ஒன்று பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், இளம்பெண் தனது காதலனின் முன்புறம் அமர்ந்து, அவரை கட்டியணைத்தபடி வாகனத்தில் சாலை விதிகளை மீறி பயணம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இவர்களின் பயணத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவே, அது தற்போது வைரலாகி காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x