ரூ.468 கோடி போதைப் பொருட்கள் அழிப்பு- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி


சுங்கத்துறை அதிகாரிகள்

ஹைதராபாத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்த சுமார் 468 கோடி ரூபாய் மதிப்பிலான 216.69 கிலோ போதை பொருட்களை அழித்தனர்.

இந்தியாவிற்குள் விமான மூலம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை அழிக்கும் பணிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு, விமான மூலம் கடத்தி வரப்படும் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட சிகரெட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை அவ்வப்போது எரித்து அழிப்பது அதிகாரிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

சுங்கத்துறை அதிகாரிகள்

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டில் சுங்கத்துறை கைப்பற்றிய சுமார் 216.69 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் அழித்தனர். இதில் ரூ.195 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின், 272 கோடி மதிப்புள்ள மெஃபாட்ரோன் மற்றும் கஞ்சா ஆகியவை அழிக்கப்பட்டது. மேலும் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் அழித்தனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள இதற்கான சிறப்பு மையத்தில் இந்த பொருட்கள் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 468 கோடியே 2 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x