அதிர்ச்சி... ஜாதிப் பெயரை சொல்லித் திட்டிய காதலன்; விஷ ஊசி போட்டு மாணவி தற்கொலை!


நந்திதா

தனது காதலன் ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகள் நந்திதா (19), புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார். லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று அவர் விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவருடன் தங்கியிருந்த சக தோழிகள் நந்திதாவை புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நந்திதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நந்திதா, கரசானூரை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்து நந்திதாவின் பெற்றோர், தனது மகளையும், ராஜேஷையும் கண்டித்துள்ளனர். இதன்பின் நந்திதா, ராஜேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நந்திதாவை சாதியை சொல்லி ராஜேஷ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தான் படிக்கும் கல்லூரி ஆய்வகத்தில் இருந்து விஷ ஊசியை எடுத்து வந்து விடுதியில் தனக்கு தானே செலுத்தி தற்கொலை செய்துள்ளார்.

ஊசி

நந்திதா எழுதியுள்ள கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், காதலன் ராஜேஷ் திட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இதுதொடர்பாக நந்திதாவின் தந்தை முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் ராஜேஷை தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

x