மாணவனை கொன்றுவிட்டு தப்பியவர்; மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் கைது


கடலூரில் 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் ஜீவா( 17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் என்ஜினீயர் ஆனந்த்(22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காலையில் ஜீவா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பெலாந்துறை வாய்க்கால் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜீவாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலை செய்த ஆனந்தை வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை வழக்கு தமிழகத்தை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னை, தாம்பரத்தில் மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளி ஆனந்தை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

x