பயங்கரம்... குழந்தை உட்பட 2 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்


சிறுவன் அர்ஷன்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கூலித்தொழிலாளியான இவருக்கு 3 வயதில் அர்ஷன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்கு வெளியே தெருவில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அர்ஷனை திடீரென கடித்துக் குதறியது. இதனால், கதறிய சிறுவனின் குரல் கேட்டு ஓடி வந்த பெற்றோர், அந்த நாயை அடித்து விரட்டினர். இதில் குழந்தையின் முகம் மற்றும் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுவன் உடனடியாக வேலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.

இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தையை கடித்த அதே நாய் அதே பகுதியில் நூலகத்தில் பணிபுரியும் குழந்தை என்பவரின் உறவினரான சுப்பிரமணி(48) என்பவரையும் கடித்துக் குதறியது. இதில் அவருக்கு கை, கால் மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அந்த வெறிநாய் அதேபகுதியில் உள்ள ஒரு பசு மாட்டையும் கடித்துள்ளது. இதனால், கடும் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்! HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை! திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை! அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை! பரபரப்பு… டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

x