அதிர்ச்சி... பிறந்த சில மணிநேரத்திலேயே ஆண்சிசுவை கரும்பு தோட்டத்தில் வீசிய தாய்!


குழந்தை

கர்நாடகாவில் பிறந்த சில மணி நேரத்திலேயே ஆண் குழந்தையை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கல்கடகி கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், நேற்று முன்தினம் காலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை கரும்பு தோட்டத்தின் அருகே வேலை பார்த்த பெண் ஒருவர் கேட்டு, சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார். அப்போது அந்த கரும்பு தோட்டத்திற்குள் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை சுற்றி எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதில் சில எறும்புகள் குழந்தையை கடித்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு அவர் பால் கொடுத்துள்ளார். இதையடுத்து கல்கடகி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

குழந்தை

விசாரணையில், கரும்பு தோட்டத்திலேயே இந்த குழந்தையை பெற்றெடுத்திருப்பது தெரியவந்தது.இதற்கான ரத்த அடையாளங்கள் கரும்பு தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்த சில மணி நேரத்திலேயே வீசி சென்றிருப்பதால், தகாத உறவால் குழந்தை பிறந்ததா அல்லது குடும்ப தகராறில் கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றாரா என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட போலீசார் தாலுகா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிக்சை முடிந்ததும் குழந்தையை அந்த பகுதியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கல்கடகி போலீசார், பச்சிளம் சிசுவை தூக்கியெறிந்துவிட்டு சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!

HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

x