சென்னை: சென்னை வேப்பேரியில் போக்குவரத்து போலீஸார் விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து வந்தனர். அப்போது அபராதம் வசூலிக்காமல் இருக்க வாகன ஓட்டிகளிடம் லஞ்சப் பணம் பெற்றனர்.
குறிப்பாக, மஞ்சப் பை ஒன்றை தொங்கவிட்டு அதில் வாகன ஓட்டிகளை பணத்தை போடும்படி செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் விசாரணை நடத்தினார்.
இதில், போக்குவரத்து போலீஸார், வாகன ஓட்டிகளிடம் லஞ்சப் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து எஸ்ஐ ராமசாமி, காவலர்கள் ரமேஷ், ரகுராமன் ஆகிய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.