விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது


விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அடங்குணம் கிராமத்தைச்சேர்ந்தவர் ஏழுமலை (55). தொழிலாளி. இவரது மனைவி கனிமொழி(49). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப்பிரிந்த இவர், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, தனது கணவரின் ஊரான அடங்குணத்திற்கு கனிமொழி நேற்று வந்திருந்தார்.

காலை 11 மணியளவில் தி.கொசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போதுஅங்கு வந்த ஏழுமலை, கனிமொழியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். கனிமொழி விலகிக் கொள்ளவே, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டார். வாக்குச்சாவடியிலேயே முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட கனிமொழி, சிறிது நேரம் கழித்து வந்து, தனது வாக்கைப் பதிவு செய்தார்